சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Friday 19 August 2016

காலமே கவிதை நண்பா !





வானமே எல்லை கொண்ட  
       வாலிபக் காதல் வந்தால்  
மானமே போயும் நெஞ்சில் 
       மறந்திட முடியார் வாழ்வில்  
கானமே தனிமை போக்கும் 
       காய்ந்துயிர் வேகும்  தன்னுள்    
ஊனமே அடைந்தும் எண்ணார்
       உலகிது மாயம் என்றே !


ஆரணங் கவளால் வெற்றி 
       அடைந்தனன் என்று நாளும் 
பாரணங் கொண்டால் வஞ்சம் 
       பறந்திடும் பஞ்சாய் ! வாழும் 
காரணப் பொருளாய் ஏற்றுக் 
       கயமைகள் களைந்தால்  வஞ்சி 
பூரணப் பொய்கை வாழும்  
       புண்ணியக் கமலம் ஆவாள் !

காரிகை மனத்தைச் சேரும்  
       காதலால் வந்த கண்ணீர்  
தூரிகை நழுவித் தன்னால் 
       துயர்வரைந் தழுத போதும்     
சாரிகை எடுத்துச் சென்ற 
       சருகதாய்  நெஞ்சம் வாடிப்    
பேரிகை கொட்டிப் போகும் 
       பிறப்பிது பாவம் என்றே  !

ஆலமே உண்டும் ஆசை 
       அகன்றிடா அன்பின் ஓசை 
சீலமே சிறைதான் என்று 
       சிதைத்திடும் அறிவை நின்று 
தூலமே துணியாய் மாறும் 
       துணிந்தவன் வாழ்க்கை தேறும்  
காலமே கவிதை நண்பா! 
       கருத்தெழப் பாடு தண்பா!

             ********************

பிரியமுடன் பாவலர் .வீ. சீராளன் 

12 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

காலம்தான்கவிதை
உண்மை
அருமை
நன்றி நண்பரே

சாரதா சமையல் said...

அருமையான கவிதை. எனது வலைப்பூவுக்கும் நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.

Unknown said...

தூலம் என்றால் பருத்தி என்பதை அறிந்து கொண்டேன் !தூய தமிழில் கவிதை தொடர வாழ்த்துகள் !

ஹிஷாலி said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள்

UmayalGayathri said...

கவிதை...கவிதை...அருமை சகோ

Thulasidharan V Thillaiakathu said...

என்ன அருமையான கவிதை!! அழகு தமிழ்! வாழ்த்துகள் சீராளன்.

சிவகுமாரன் said...

அருமை.
காலமே கவிதை
காலமே பாடம்
காலமே மருந்து

சீராளன்.வீ said...

வணக்கம் உறவுகளே !

கரந்தை ஜெயக்குமார்
Saratha J
Bagawanjee KA
ஹிஷாலீ
R.Umayal Gayathri
Thulasidharan V Thillaiakathu
சிவகுமாரன்

தங்கள் அன்பின் கருத்துகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
வாழ்க வளத்துடன் !

Nagendra Bharathi said...

அருமை அருமை

சீராளன் said...

வணக்கம் நாகேந்திர பாரதி !

தங்கள் அன்பின் கருத்திற்கு
நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
வாழ்க வளத்துடன் !

அம்பாளடியாள் said...

ஆலமே உண்டும் ஆசை அகன்றிடா அன்பின் ஓசை சீலமே சிறைதான் என்று சிதைத்திடும் அறிவை நின்று தூலமே துணியாய் மாறும் துணிந்தவன் வாழ்க்கை தேறும் காலமே கவிதை நண்பா! கருத்தெழப் பாடு தண்பா!

அருமை! அருமை! வாழ்த்துக்கள் சகோ .

vinoth said...

அருமை! அருமை! வாழ்த்துக்கள்